முத்தூட் நிறுவன அதிபரின் மகன் பால் ஜார்ஜ் கொலை வழக்கில் நடிகை பாவனாவுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. இதுதொடர்பாக வெளியாகும் செய்திகள் தவறானவை என்று பாவனாவின் மேனேஜர் மறுத்துள்ளார்.

கேரளாவில் மிகவும் பிரபலமான முத்தூட் நிறுவனங்களின் அதிபரின் மகன் பால் ஜார்ஜ் சமீபத்தி்ல படுகொலை செய்யப்பட்டார்.

கொலை நடந்த சமயத்தில் பால் ஜார்ஜின் காரில் பிரபல நடிகை ஒருவர் பயணித்ததாக தகவல்கள் வெளியாகின. அந்த நடிகையின் கைப்பை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அந்த நடிகை மலையாளத்திலிருந்து தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துப் பிரபலமானவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்த நடிகை கொலையாளிகளிடம் தன்னைக் காட்டிக் கொடுத்து விட வேண்டாம் என்று கெஞ்சியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் பாவனாதான் அந்த நடிகை என்று கேரளாவில் பரபரப்பு எழுந்துள்ளது.

ஆனால் இதை பாவனாவின் மேனேஜர் அஜய் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையி்ல, பாவனாவுக்கும், சம்பந்தப்பட்ட கொலைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. கொலை நடந்த சமயத்தில் பாவனா, நடிகர் பிருத்விராஜுடன், ஜோஷி இயக்கத்தில் உருவாகும் மலையாளப் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார்.

பால் ஜார்ஜ் எப்படி இருப்பார் என்றே பாவனாவுக்குத் தெரியாது. இந்த நிலையில் அவரது பெயரை இழுத்து விடுவதைப் பார்க்கும்போது, யாரோ சிலர் வேண்டும் என்றே சதிவேலைகளில் ஈடுபடுவது போல் தெரிகிறது என்றார்

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்