
ரஜினி, கமல், மற்றும் ஏராளமான நடிகர் நடிகைகள் உதவியுடன் வெளிநாட்டில் நட்சத்திர கலைநிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்தார் விஜயகாந்த். அதன்பின் இதே போன்ற ஒரு விழாவை ஏற்பாடு செய்து நிதி திரட்டவும், அதில் கமல் ரஜினி கலந்து கொள்ளவும் வேண்டுமென நடிகர் சங்கம் முனைந்து வருகிறது. ஆனால் “பணத்தை சேர்க்க கலை நிகழ்ச்சி தேவையில்லை. இப்போது இருக்கிற 18 கிரவுண்ட் நிலமே போதும்” என்கிற அளவில் பேசி அனைவரையும் கப்சிப் ஆக்கியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
நாடக கலையை வலியுறுத்தும் விதமாக நினைவலைகள் என்ற தலைப்பில் எட்டுநாள் நாடக நிகழ்ச்சி நடந்தது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பலரும் இந்த நாடகங்களில் நடித்தார்கள். இதன் நிறைவு நாள் விழாவில் கலந்து கொண்டார் ரஜினி. முன்னதாக பேசிய நடிகர் சங்க செயலாளர் ராதாரவி, நலிந்த கலைஞர்களுக்கு தற்போது 500 ரூபாய் கொடுத்து வருகிறோம். ரஜினி நினைத்தால் அதை ஆயிரம் ரூபாயாக கொடுக்க முடியும். நட்சத்திர கலை விழாவை வெளிநாட்டில் நடத்தி அதில் ரஜினியும் கலந்து கொண்டால் பெருமளவு நிதி சேர்க்கலாம் என்று பேசினார். ராதாரவியின் இந்த பேச்சுக்கு பதில் சொன்ன ரஜினி, “யாரையும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி அழைக்கக் கூடாது. அவர்களாக விரும்பி வர வேண்டும். ஆனால், தி.நகரின் மையப்பகுதியில் இத்தனை கிரவுண்ட் நிலத்தை வைத்துக் கொண்டு பணத்திற்கு சிரமப்படுவது தங்க தட்டில் தேங்காயை வைத்துக் கொண்டு விற்பனை செய்வது போலாகும்” என்றார்.
இந்த இடத்தில் ஒரு தியேட்டர் கட்ட வேண்டும் என்பதுதான் ரஜினி கொடுத்திருக்கும் ஐடியா
0 comments