மீச வச்சு நடிக்கறதா? அல்லது வைக்காம நடிக்கறதா? அல்லது நடிக்காமலே இருந்திடலாமா? இப்படி ஏராளமான குழப்பங்களில் தடுமாறி வந்த ஷாம் பிறகு வேறு வேறு மாதிரி நடித்து பார்த்தார். அதில் அரும்பு மீசையும் இருந்தது. அருவா சைசுக்கு போகாவிட்டாலும், அதற்கு குறைவில்லாத பட்டை மீசையும் இருந்தது. கதையை மழிச்சிட்டு, காட்டுத்தனமா மீசைய மட்டும் வைச்சா போதுமான்னு ஜனங்க அதுக்கு பிறகு வந்த ஷாம் படத்தையும் புறக்கணிக்க, அண்டை மாநிலமான ஆந்திரா “வா மச்சான் வா” ன்னு ஷாமுக்கு மறுவாழ்வு கொடுத்தது.


இவர் நடிச்ச கிக் என்ற படம் செம ஹிட். தமிழில் ரீமேக்கும்போது கூட ஷாமை நீக்காம வச்சிகிட்டாங்க ஜெயம் ரவி பிரதர்ஸ். இந்த நிலையில்தான் நேரடியாக ஆந்திராவில் தயாராகும் படம் ஒன்றில் முழு நீள ஹீரோவாக நடிக்கிறார் ஷாம். ‘மனசு எவிரண்டே’ என்ற படத்தில் இவர்தான் ஹீரோ. தமிழில் சில படங்களை இயக்கியிருக்கும் நேதாஜி இந்த படத்தை இயக்குகிறார். ஜோதிகா, சிம்ரன் என்று பேரழகிகளுக்கு ஜோடியாக நடித்த ஷாம், இந்த படத்தில் மல்லிகா கபூருடன் ஜோடி சேர்கிறார். இதுதான்யா கெரகம்ங்கிறது...

தமிழில் புறம் தள்ளப்பட்ட சித்தார்த், ஜெய் ஆகாஷ், பப்லு என்ற ப்ருத்திவிராஜ் இவர்களுக்கெல்லாம் ஆந்திராவில் புல் மீல்ஸ் போட்டு விருந்து வைக்கிறது அந்த படவுலகம். அந்த லிஸ்ட்டில் ஷாமும் சேர்ந்தா சந்தோஷம்தானே! இப்பவும் ஒரு குழப்பம் அவரை விரட்டிகிட்டே இருக்காம். என்னது?

மீச வைக்கறதா? வேணாமா?

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்