
ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான மாப்பிள்ளையை தனுஷ் ரீமேக் செய்கிறார் அல்லவா... ஒரிஜினல் படத்தில் ரஜினிக்கு மாமியாராக ஸ்ரீவித்யா நடித்திருந்தார். புதிய படத்தில் இந்த பவர்புல் வேடத்தில் நடிக்க தபு உள்ளிட்ட பல பெரிய நடிகைகளிடம் பேசி வந்தனர். ஆனால் பெரும்பாலானோர் நடிக்க மறுத்துவிட்டனர்.
இறுதியில் அந்தப் பாத்திரத்தில் நடிக்க நடிகை ஸ்ரீதேவி ஒப்புக் கொண்டுள்ளார். இத் தகவலை அப்படத்தின் இயக்குநர் சுராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சுராஜ் கூறியதாவது:
இந்தப் புதிய மாப்பிள்ளையின் நாயகியாக தெலுங்கு முன்னணி நடிகை ஹன்ஸிகா மோத்வானி அறிமுகமாகிறார்.
"மாமியார் ஸ்ரீவித்யா கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியை நடிக்க கேட்டிருக்கிறேன். அவரிடம் கதை சொன்னேன். பிடித்திருப்பதாக கூறினார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் மீண்டும் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.
மாமியார்-மருமகனுக்கு இடையே நடக்கும் மோதல்தான் கதை. அதன் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு முற்றிலும் புதிதாக ஸ்கிரிப்ட் தயாரித்திருக்கிறேன். வழக்கமான எனது படங்களைப்போல இதிலும் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும்", என்றார் சுராஜ்.
ஒரிஜினல் படத்தை ஒழுங்காக எடுத்தாலே போதும்... அதில் இல்லாத காமெடியா!
0 comments