.jpg)
சுவற்றில் பாய்ந்து பின்னங்காலால் அடிக்கிற கேப்டன் ஸ்டைலில் பலரின் மூக்கை உடைத்தது சிக்ஸ்பேக்! பட்டினி கிடந்து பாதியாக இளைத்துப் போய், பார்க்கவே பரிதாபமாக தோற்றமளித்த ஹீரோக்கள் அதைவிட பரிதாபமாக தோல்வியை சந்தித்தார்கள். இந்த புயலிலும் கரையதுங்காமல் கவனமாக தப்பித்தவர் சூர்யா மட்டுமே. வாரணம் ஆயிரத்தில் இவரது சிக்ஸ்பேக் ரசிக்கப்பட்டது. புலியை பார்த்து புள்ளிமான் சூடு போட்ட கதையாக நடிகைகளும் சிக்ஸ் பேக்குக்கு தாவினார்கள். அங்கேதான் சிக்கலே. நடிகைகளின் இந்த இரக்கமில்லாத இம்சையை ஒரு விழாவில் பிடிபிடியென பிடித்தார் நகைச்சுவை நடிகர் விவேக்.
நம்ம ஊர்லே கொழுக்கு மொழுக்குன்னு இருந்தால்தான் ரசிப்பான். சசிக்குமார் படத்திலே நடிக்கிற ஹீரோயின்களையெல்லாம் எங்கேதான் பிடிக்கிறரோ? எல்லாம் சும்மா கும்முன்னு இருக்குறாங்க. ஆனால், கொஞ்ச நாளா இந்த சிக்ஸ் பேக் நடிகர்களை போட்டு ஆட்டியது பத்தாதுன்னு நடிகைகளையும் விடலே.
அவங்களோட வயற்றை பார்க்கிற ரசிகன், ஐயோ பாவம். இப்படி பட்டினி கிடந்து இளைச்சு போச்சேன்னு பரிதாபப்படுற மாதிரி ஆயிருச்சு. ரசிகனுக்கு ஒரு கிரிப் வேணும். ஒண்ணுமே இல்லாம வத்தி போயிருந்தா எப்படி என்றார் பலத்த ஆரவாரத்திற்கிடையில். நல்லவேளையாக நயன்தாரா நடித்திருந்த அந்த படத்தின் விழாவில் அவர் வராமல் போனார். வந்திருந்தால்...?
ஒருவேளை விவேக் அப்படி பேசியிருக்க மாட்டாரோ என்னவோ?
0 comments