ரஜினி நடித்த மாப்பிள்ளையின் ரீமேக்கில் தனுஷுக்கு மாமியாராக ஸ்ரீதேவி நடிக்கிறார் என்பதை ஏற்கெனவே கூறியிருந்தோம்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக ஸ்ரீதேவிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா... ரூ.1 கோடி!

ரஜினி, அமலா நடிக்க, நடிகர் சிரஞ்சீவி தயாரிப்பில் ராஜசேகர் இயக்கிய படம் மாப்பிள்ளை. 1989-ல் வெளியான இப்படம் வசூலில் ஒரு ப்ளாக் பஸ்டர்.

மாமியார் - மருமகன் மோதல்தான் படத்தின் கதை. மாமியார் வேடத்தில் ஸ்ரீ வித்யா நடித்தார். இந்த கேரக்டரில் நடிக்கத்தான் பொருத்தமான நடிகையைத் தேடி வந்தனர்.

ஸ்ரீதேவி இப்படத்தில் நடிக்க சம்மதித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இதில் நடிப்பதற்கு ஸ்ரீதேவி ரூ. 1 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தப் படத்தில் தனுஷ் - ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடிக்கிறார்கள். சுராஜ் இயக்குகிறார்.

மாமியார் வேடத்தில் நடிக்கும் ரிட்டயர்டு நடிகை ஒருவருக்கு சம்பளமாக ஒரு கோடி பேசப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

தமிழ் சினிமா வெளங்கீரும் என்று கண் சிமிட்டுகிறார்கள் கோலிவுட்வாசிகள்

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்